"பெண்கள் மசூதிக்குள் தொழுகை நடத்த அனுமதி உண்டு" - உச்ச நீதிமன்றத்தில் முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் தகவல்
மசூதிக்குள் பெண்கள் தொழுகை நடத்துவதற்கு அனுமதி உண்டு என அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடந்த வழக்கு ஒன்றில் வாரியம் சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், இஸ்லாமியக் கோட்பாட்டின்படி ஒரு பெண் வீட்டிலோ அல்லது மசூதியிலோ தனது விருப்பப்படி தொழுகை செய்ய உரிமை உண்டு என்று குறிப்பிட்டுள்ளது.
மதீனாவில் உள்ள மஸ்ஜித் அன்-நபவி மசூதிக்குள் ஆண்- பெண்களுக்கு தனித்தனி அறைகள் இருப்பதும் பிரமாணப் பத்திரத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
Comments